
திருப்பூர்:கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி மாணவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் கிளை, 'யங் இந்தியா' மற்றும் திருப்பூர் மாநகராட்சி சார்பில், புதிய 'மொபைல்ஆப்' அறிமுக விழா நேற்று நடந்தது.தன்னார்வலர் குழு மூலம், வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் உடல்நலம், வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்யலாம். கண்காணிப்பில் இருப்பவர், வீட்டில் இருந்து வெளியே வந்தாலும், சுகாதாரத்துறைக்கு துரிதமாக தகவல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் அறிமுக விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் விஜய கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.'யங் இந்தியா' அமைப்பின் தலைவர் கதிரேசன் கூறுகையில்,''ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் ரதி மேற்பார்வையில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவு மாணவர்கள் கோகுல், அஸ்வத், இந்த 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளனர். விரைவில், பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.



No comments:
Post a Comment