Join THAMIZHKADAL WhatsApp Groups
நிதி, விவசாயம், வனம், வணிகம், திட்ட மேலாண்மை, சர்வதேச வர்த்தகம், ஊரக வளர்ச்சி ஆகியவற்றில் எம்.பி.ஏ., மற்றும் வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பயின்ற இளைஞர்கள், கூட்டுறவு அமைப்புகளில், நான்கு மாதங்கள், இத்திட்டம் மூலம் உள்ளீட்டு பயிற்சி பெறுவர்.
இதsனால், இவர்கள் அனுபவ அறிவைப் பெற முடியும்.இவர்கள் மூலம், கூட்டுறவு அமைப்புகள், புதுமைத் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்த முடியும்.
இது, வேளாண் மற்றும் வேளாண் சார் தொழில்துறைக்கு, ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.உள்ளூரிலேயே தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க 'உள்ளூருக்கான குரல்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டுறவு அமைப்புகளில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், தாங்கள் பெற்ற நடைமுறை மற்றும் அனுபவ அறிவின் மூலம், சொந்தமாகத் தொழில் துவங்குவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment