Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 1, 2020

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த முக்கிய அறிவிப்பு


தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்து சேவை நாளை முதல் தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை போக்குவரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கான வழிமுறைகளையும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment