Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 14, 2020

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியர்கள் நியமனம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தொற்று பாதித்தவர்களுக்கு ஆலோசனை: மண்டல வாரியாக ஆசிரியர்கள் நியமனம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தினமும் நலம் விசாரிக்க, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு, தனிமையில் இருப்பவர்களில் பலர், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.அவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள் வழியாக, மன தைரியம் கொடுத்து, தினமும் நலம் விசாரிக்க, மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, மண்டலத்திற்கு, 10 - 12 எண்ணிக்கை வீதம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். காலை, 8:00 மணி முதல் நண்பகல், 2:00 மணி வரையும், 2:00 முதல் இரவு, 8:00 மணி வரையும், இரண்டு, 'ஷிப்ட்'கள் வீதம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், வார்டு, மண்டல அலுவலகத்தில் இருந்து, வீட்டு தனிமையில் இருப்பவர்களிடம், மொபைல் போனில் பேசுவர்.உடல் நலம், மன அழுத்தம், நோய் அறிகுறி குறித்து விசாரிப்பர். மேலும், மன அழுத்தத்திற்கான காரணத்தை விசாரிப்பர்.

பிரச்னைக்கு ஏற்ப, மன தைரியம் வழங்குவர்.அதிலும் மனதிருப்தி அடையவில்லையெனில், மனநல மருத்துவர் மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

உதவி குறித்து கேட்டால், மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று, அதை நிறைவேற்ற உதவ வேண்டும்.இந்த பணிக்காக, மாநகராட்சி சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இதன்மூலம், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடன் இருப்பர் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News