Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 30, 2020

குட் நியூஸ்... இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு!





கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவேக்சின் என்று அழைக்கப்படும் தடுப்பூசியை, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா கூறியுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தவிர அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின் - மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் சேர்ந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

No comments:

Post a Comment