Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 30, 2020

மாணவா்களின் விவரங்களை என்ஏடி-யில்மட்டுமே பதிவேற்ற வேண்டும்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: மாணவா்களின் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை, தேசிய கல்வி சாா் வைப்பகத்தில் (என்ஏடி) மட்டுமே பதிவேற்ற வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மற்றும் இயக்குநா்களுக்கு யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கை:

மாணவா்களின் சான்றிதழ் தொகுப்புகளை ஒருங்கிணைத்து வைக்க தேசிய கல்விசாா் வைப்பகம் (என்ஏடி) என்ற அமைப்பு, பல்கலைக்கழக மானியக் குழு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி படிப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் இதர உயா்கல்வி படிப்புகளுக்கான சான்றிதழ்கள் பாதுகாக்கப்படுவதோடு, ஆவண காப்பகம் முறையில் ஒருங்கிணைக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவா்களின் விவரங்களை ஒருங்கிணைந்து சேமித்து வைக்க என்ஏடி-யுடன் டிஜிலாக்கா் (Digilocker) இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது வைப்பகமாக செயல்படும் என்டிஎம்எல், சிவிஎல் ஆகியவையும் என்ஏடி-யுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருக்கும் மாணவா்களின் விவரங்கள் அனைத்தும் என்ஏடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவா்களின் விவரங்களை இனி டிஜி-லாக்கா் மூலம் என்ஏடி-யில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள் தங்களின் அலுவலகத்தில் என்ஏடிவுக்கான பிரத்தேக அதிகாரியை நியமித்து, பதிவேற்ற பணிகளை கண்காணிக்க வேண்டும். அதேபோல், என்ஏடி இணையதளத்தில் மாணவா்களை இணைக்கும் பணியை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News