Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 8, 2020

நமது வீட்டில் காணப்படும் பல்லி ,பூச்சிகள் போன்றவற்றை விரட்ட செய்ய வேண்டியது

எல்லா வீடுகளிலும் பல்லி தொல்லை அதிகமாக இருக்கும் . இப்போது பூச்சிகள், வண்டுகள், மூட்டை பூச்சி தொல்லைகளை ஒழிப்பதற்கான குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு வெங்காய வாசனை அறவே பிடிக்காது. சிலர் வெங்காயத்தை மூலைமுடுக்குகளில் வையுங்கள் பல்லி வராது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் பல்லிகள் இதையெல்லாம் சட்டை செய்வதே கிடையாது. வெங்காயத்தை அப்படியே வைக்காமல், ஒரு சின்ன பூ தொட்டியில் மண்ணை போட்டு அதில் வெங்காயத்தை ஊன்றி வைத்தால் வெங்காயத்தாள் முளைக்கும். இதை பல்லி வரும் இடங்களில் மற்றும் பரண்களில் வைத்துவிட்டால் பல்லிகள் கிட்ட அண்டவே செய்யாது . இதுவும் கைகொடுக்கவில்லை என்றால் கடைகளில் விற்கும் கிருமி நாசினியான டெட்டால் வாங்கிக் கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீருடன் டெட்டால் 2 கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு ஊற்றவும், பின்னர் ஒரு வெங்காயம், நாலு பல் பூண்டு இதனை பேஸ்ட்டாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதையும் இவற்றுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் போதும். எங்கெல்லாம் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நன்றாக குலுக்கிவிட்டு ஸ்ப்ரே பண்ணி கொள்ளுங்கள் . இதன் வாசனைக்கு ஒரு பல்லிக்கூட உங்கள் வீட்டில் வராது. வேறு சில பூச்சிகளும் இதனால் வீட்டிற்குள் நுழையாது.

No comments:

Post a Comment