Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 8, 2020

தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுறுகிறீர்களா?.. சாப்பிடவேண்டிய முறைகள்.


தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுறுகிறீர்களா?.. சாப்பிடவேண்டிய முறைகள்.

தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட பல கரணங்கள் இருக்கிறது. நமது மனஅழுத்தம், மனசோர்வு, செரிமான பிரச்சனை போன்றவைகளும் தூக்க சுழற்சி முறைகளை சிதைக்கும் காரணிகளாக இருக்கிறது. சில இயற்கை உணவுகள் நம்மிடையே உறக்கத்தை தூண்டும் உணவுகள் குறித்து இனி காண்போம்.
தூங்குவதற்கு முன்னதாக அல்லது பகல் வேலையில் பாதம் சாப்பாட்டு வந்தால் தூக்கம் மேம்படும். தூக்கத்தை ஓங்குபடுத்தும் ஹார்மோன் "மெலடோன்" மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமம் "மக்னீசியம்" அதிகளவு பாதாம் இருக்கிறது.

இதன் மூலமாக நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு நல்ல வழிவகை செய்கிறது. மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய டிரிப்டோபைன் அமினோ அமில செயல்பாட்டை அதிகரிக்கும்.

தூக்கமின்மையால் அதிகளவு ஆளாகும் நபர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் டிரிப்டோபைன் அமினோ அமிலம் அதிகரிக்கிறது. மூளைக்கு சமிக்கை ஓடுது தூக்கத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருளை உருவாக்கும்.

நல்ல தூக்கத்தை ஏற்படுத்த சாமந்தி தேநீர் நல்ல வழிவகை செய்யும். சாமந்தி தேநீரில் உள்ள அபிஜெனின் என்கிற ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளின் செயல்பாடுகளை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்துகிறது.
பாலிற்கும் தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. பால் மட்டும் அருந்தாமல், பாலுடன் மஞ்சள், குங்கும பூ சேர்ந்து குடித்து வந்தால் நல்ல தூக்கமானது ஏற்படும். இதில் டிரிப்டோபைன் அமினோ அமிலம் அதிகளவு இருக்கிறது. நடைப்பயிற்சி செய்யும் நபர்கள் பால் குடித்து வர நல்ல தூக்கம் ஏற்படும்.

இரவு வேளைகளில் குறைவாக சாப்பிடுவது மிகவும் நல்லது. ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால், நமது ஆரோக்கியம் மேம்படும், ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தும். ஓட்ஸில் மனஅழுத்தத்தை குறைக்க கூடிய வைட்டமின் பி 6 சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

No comments:

Post a Comment