Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 27, 2020

முக கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்



சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம். முக கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால்தான் கொரோனா வேகமாக பரவுகிறது. கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது. 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை நடைபெறுகிறது. வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment