
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் 3,600 பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாணவியர் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கின்றனர். கொரோனா காரணமாக மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாணவர்கள் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 மதிப்பெண்களும், வருகைப் பதிவுக்கு 20 மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.



No comments:
Post a Comment