
கருவுற்ற ஆரம்ப காலத்தில் உடல் சோர்வு மனசோர்வு எல்லாம் இணைந்து இறுதியில் படுக்கையில் சுருட்டி விழவே செய்யும். இந்த காலத்தில் உண்பதும், உறங்குவதும் கூட குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தான் என்னும் போது உடற் பயிற்சி சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் பேறுகாலம் முழுவதும் உடலை வறுத்தும் பயிற்சிகள் தேவையில்லை. வாக்கிங், யோகா, உடலில் சற்று தெம்பு இருக்குமானால் நீச்சல் போன்ற ஆரம்ப பயிற்சிகளில் ஈடுபடலாம். கருவுற்ற முதல் ஐந்து மாத காலங்களுக்கு மசக்கை வாந்தி, உடல் சோர்வு, பசியின்மை ஒருவித எரிச்சல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகான கால கட்டத்தில் அதாவது ஐந்து மாதங்களுக்கு பிறகு ஆறாவது மாதத்தில் சிறிய பயிற்சிகளை மீண்டும் தொடங்கலாம். பயிற்சியுடன் மூசுச் பயிற்சி போன்றவையும் சிறந்தது. சுயமாக எந்த பயிற்சியையும் மேற்கொள்ளலாமல் அனுபவமிக்க உடற்பயிற்சியாளரின் உதவியுடன் பிரசவகாலத்தில் பயன்படும் உள் உறுப்புகள் சீராக செயல்படும் விதமாக அவை பலமடையும் விதமான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. இதனால் பிரசவக்காலத்தில் தசைகள் எளிதாக உதவும். குறிப்பாக தலைப்பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக இது போன்ற பயிற்சியை செய்ய வேண்டும்



No comments:
Post a Comment