Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 18, 2020

கல்வி சேனல் மூலம் பாடம் செங்கோட்டையன் தகவல்


''கல்வி சேனல் மூலம், மாணவ - மாணவியருக்கு கல்வி போதிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி, குள்ளம்பாளையம்வீட்டில், நம் நிருபருக்குஅமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவ - மாணவியருக்கு, கல்வி சேனல் மூலம், பாடம் போதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'ஆன்லைன்' வசதியை விட, கல்வி சேனல் மூலமாக, எளிதில் கல்வியை கொண்டு சேர்க்க முடியும்என்பதால், இம்முயற்சி மேற்கொண்டு உள்ளோம்.மேலும், பொதிகை உட்பட ஓரிரு சேனல்கள் மூலம், கல்வி போதிக்க முடிவு செய்துள்ளோம்.

வகுப்புக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.வகுப்பு வாரியாக பாடத் திட்டத்தை குறைக்க, முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை, ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படலாம். ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத்திட்டம் குறைக்கப்படும். எந்த வகுப்புக்கு, எந்த பாடம் முக்கியமோ, அந்த பாடங்களை மட்டுமே கொண்டு, பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது.

மேலும், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 71 லட்சம் மாணவ - மாணவி யருக்கு, வகுப்பு மற்றும் பாட வாரியாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த குடோன்களுக்கு அனுப்பி, இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுக்கு பின்பே, அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், எந்த பாடங்களை தவிர்ப்பது, எதை போதிப்பதுஎன, அறிவிக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment