Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 14, 2020

லேசான கொரோனா நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்; மிதமான கொரோனா நோய்க்கு ரெம்டிசிவிர் மருந்து : சிகிச்சை வழிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு



டெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மிதமான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிக்கு வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டிசிவிர் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் கடுமையான சிறுநீரகக் கோளாறுக்கு ஆளானோர், கர்ப்பம் அல்லது பாலூட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்தை சிகிச்சைக்கு அளிக்கக் கூடாது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று மிதமாக இருக்கும் பட்சத்தில் tocilizumab என்ற நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் மருந்துடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால் மட்டுமே மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின்-ஐ அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று தீவிரமாக இருந்தால், இம்மருந்தை அளிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா தொற்று தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை azithromycin மாத்திரைகளுடன் சேர்த்து கொடுக்கலாம் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், அதனை தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்கும் முன் நோயாளிக்கு ஈசிஜி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு இடையே சுவை, மனம் ஆகியவை உணரப்படாவிட்டால் அவர் கொரோனா தொற்றுக்கான அறிகுறி என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment