Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 2, 2020

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பெற்றோரிடம் கருத்து கேட்கிறது கல்வித் துறை



ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களைக் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து மெட்ரிக் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நர்சரி பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட பள்ளிகளைச் சேர்ந்த தலா ஒருவரைத் தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர்களின் விவரங்களைப் பெற்ற பிறகு மாவட்ட வாரியாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment