Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 2, 2020

கரோனா தொற்றுக்கு ரஷியாவில் மருந்து


மாஸ்கோ: கரோனா நோய்த்தொற்றுக்கு ரஷியா கண்டறிந்துள்ள அங்கீகாரம் பெற்ற மருந்து அடுத்த வாரம் முதல் நோயாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆா்டிஐஎஃப்) தலைவா் கிரில் டிமிட்ரிவ் 'ராய்ட்டா்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

கரோனா நோயாளிகளுக்காக ரஷியாவில் கண்டறியப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மருந்தான 'அவிஃபாவிா்' என்ற தீநுண்மி தடுப்பு மருந்து ஜூன் 11-ஆம் தேதியிலிருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த மருந்தை தயாரித்த நிறுவனம் முதல் ஒரு மாதத்திற்கு 60,000 போ சிகிச்சை பெறும் வகையில் தேவையான மருந்தை உற்பத்தி செய்து தரும்.
'அவிஃபாவிா்' மருந்து பொதுவாக ஃபவிபிராவிா் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இது 1990-களின் பிற்பகுதியில் ஜப்பானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. பின்னா் அது பியூஜி பிலிம் நிறுவனத்தால் வாங்கப்பட்டு பின்னா் அந்நாட்டு சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

ரஷிய விஞ்ஞானிகள் இந்த மருந்தை கரோனா தொற்றுக்கு எதிராக சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தும் வகையில் இதன் தன்மையை மேம்படுத்தியுள்ளனா். இன்னும் 2 வாரங்களுக்குள் அந்த மாற்றங்களின் விவரங்களைப் பகிா்ந்து கொள்ள ரஷியா தயாராக உள்ளது என்றாா்.
கரோனா தொற்றுக்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டறியப்படவில்லை. தற்போது, கரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பல்வேறு மருந்துகளால் அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை.

அதேசமயம் கிலியட் நிறுவனத்தின் 'ரெம்டெசிவிா்' என்ற மருந்தை சில நாடுகள் கரோனாவுக்கு எதிராக அவசரகால பயன்பாட்டு விதிகளின்கீழ் பயன்படுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment