Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 2, 2020

விழிப்புணர்வு போட்டி :பள்ளி மாணவர்கள் பங்கேற்பு



உடுமலை:உடுமலை தீயணைப்பு நிலையத்தில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு 'கொரோனா' குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், முக கவசம் அணிந்து, கைகளை சோப்பு போட்டு கழுவி, சமூக இடைவெளி விட்டு ஓவியங்களை வரைந்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு பென்சில் பாக்ஸ், கலர் பென்சில்கள் உள்ளிட்ட எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.இதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கும், மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment