Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய சூழ்நிலையில் நேரமின்மை காரணமாக, நம்முடைய தலை முடியை சரியாக பராமரித்து கொள்ள முடியவில்லை. கடைகளில் விற்கும் ஷாம்புவை தான், நாம் எல்லோருமே பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும் செயற்கை பொருட்கள் கலக்காத, நம் வீட்டிலேயே, நம் கையால் தயாரிக்கப் போகும், இந்த ஷாம்புவை பயன்படுத்தினால், நம்முடைய முடி உதிர்வு கட்டாயம் விரைவாக குறையும். நீங்கள் இந்த ஷாம்புவை பயன் படுத்திய ஒரு முறையிலேயே உங்களது மூடி பளபளப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களது முடியில் மாற்றம் இருப்பதை, மற்றவர்கள் கண்டுபிடிக்கும் அளவிற்கு வித்தியாசம் தெரியும் என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் நம்பமாட்டீர்கள்.
ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! இந்த ஷாம்புவை, வீட்டிலேயே எந்த முறையில் தயாரிக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒற்றை அடுக்கு செம்பருத்திபூ 5, செம்பருத்தி பூ செடியின் இலை 5, வெந்தயம் ஒரு ஸ்பூன். ஒரு கப் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி(உங்கள் தலைமுடிக்கு எவ்வளவு ஷாம்பூ தேவையோ அந்த அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்), அதில் செம்பருத்திப் பூ இதழ்களை மட்டும் காம்பிலிருந்து கிள்ளி போட்டுக் கொள்ளுங்கள். செம்பருத்தி இலையையும் அந்தத் தண்ணீரில் போட்டு விடுங்கள். வெந்தயத்தை மிக்ஸியில் ஒருமுறை போட்டு பொடி செய்து வெந்தயத் தூள், ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த மூன்று பொருட்களும் சேர்த்த அந்த தண்ணீரை, அடுப்பில் மிதமான தீயில் வைத்து, மிதமான சூட்டில், ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டால், இயற்கையான ஷாம்பு தயார். அடுப்பிலிருந்து கீழே இறக்கி, அந்த தண்ணீரை நன்றாக ஆறவைத்து, வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்தாலே போதும். உங்களது தலைமுடியில் ஏற்படக்கூடிய மாற்றத்தை கண்கூடாக காணலாம். உங்களுக்கு செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாட்டு மருந்து கடைகளில், செம்பருத்திப் பூ தூள், பாக்கெட்டுகளில் கிடைக்கின்றது.
அந்தத் தூளை வாங்கி தண்ணீரில் போட்டு, அதனுடன் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த ஷாம்புவை தலைக்கு தேய்த்து குளித்தாலும் நல்ல பலன். கிடைக்கும். ஷாம்பு போட்டு குளித்தது போன்றே நல்ல வாசமும், உங்கள் முடியில் இருக்கும். ஷாம்பு நுறைப்பது போல, நல்ல நுறை வரும் என்பதில் சந்தேகமே இல்லை. வாரத்திற்கு 2 முறை, இதே முறையில் உங்களது தலைமுடியை, இந்த இயற்கையான ஷாம்பு போட்டு குளித்து வாருங்கள். தலைமுடி உதிர்வு கூடியவிரைவில் நின்று, முடி அடர்த்தியாக வளரும். கேரளத்து பெண்களின் அழகான முடி ரகசியங்களில் இதுவும் ஒன்று.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment