Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 14, 2020

கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினைக்கு 5 நாட்களில் தீர்வு. கழுத்து வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம், வாயுத் தொல்லை, போன்ற பல பிரச்சனைக்கு இதைக் குடித்தால் போதும்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நமக்கு முழுமையான சத்து கிடைக்கப் பெறுவதில்லை. சிறுவயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. கண்பார்வை குறைந்து விடுகிறது. வாய்வுத்தொல்லை ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு, முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பை, இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்துவிடுகிறது. இதற்கு கால்சியம் குறைபாடுதான் ஒரே காரணம். நம் உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இதை குடித்துவிட்டு தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை உங்களது உடல் மாயாஜாலம் செய்ததுபோல கட்டாயம் சுறுசுறுப்பாக மாறும். தொடர்ந்து 5 நாட்கள் நீங்கள் இதை குடித்து வந்தால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் அடைந்ததாக உணரமுடியும். நம் முன்னோர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளைத்தான் இந்த குறிப்பில் நாம் பயன்படுத்த போகின்றோம். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், நவ நாகரீக உலகம் ஆரோக்கியமான பொருட்களை எல்லாம் மறந்து விட்டது என்றே சொல்லலாம். சரி. இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? கருப்பு எள்ளு அல்லது வெள்ளை எள்ளு. பாதாம் பருப்பு 5, பசும் பால் ஒரு டம்ளர், நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன். கருப்பு எள்ளாக இருந்தாலும், வெள்ளை எள்ளாக இருந்தாலும், அதை சூடான கடாயில் போட்டு பட்பட்டென்று வெடிக்கும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஆறிய பின்பு 5 டேபில் ஸ்பூன் எல்லை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். 5 பாதாம் பருப்பையும் போட்டு, இரண்டையும் சேர்த்து ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு சாப்பிட்ட பின்பு, அரை மணி நேரம் கழித்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு கலந்து, ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரையை சேர்த்து, நன்றாக கலக்கி குடித்து விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் கண்டவிழிப்பதை உணரலாம். கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது, என்று பெல்ட் போட வேண்டாம். இடுப்பு எலும்பு தேய்ந்து விட்டது என்று பெல்ட் போட்டுக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியமாக மாடிப்படி ஏறி இறங்கலாம். தரையில் அமர்ந்து எழுந்திக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கலாம். ஊட்டச் சத்து, கால்சியம் சத்து அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் இதை குடிக்கக்கூடாது. குழந்தைப் பேறு வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் பெண்களும் இதை குடிக்க கூடாது. மற்றபடி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் பசும்பாலில் இந்த ஆரோக்கியமான பொடியை கலந்து குடித்து வரும் பட்சத்தில், கண்பார்வை குறைவு, மூட்டுவலி, வாயுத்தொல்லை, எலும்பு தேய்மானம் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. 5 நாட்கள் தொடர்ந்து குடித்து பார்த்தாலே உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும். அதன் பின்பும் தொடர்ந்து குடிக்க முடியவில்லை என்றாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது குடித்து பழகி கொள்ளுங்கள்.a

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News