Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை வாடகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், கடலுாரில் தனியார் நிறுவனங்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் குழுவினர் அணுகி வருகின்றனர். கொரோனா தடுப்பு ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின், கடந்த 1ம் முதல் 60 சதவீத பயணிகளுடன், கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து துவங்கினாலும், பயணிகள் வரத்து குறைவாக உள்ளதால் போதிய வருமானம் இல்லை. இதனால் அரசு பஸ்களை வாடகைக்கு இயக்க விழுப்புரம் கோட்டம் அறிவித்துள்ளது. அரசு பஸ்களில் மண்டலங்களுக்குள் குழுவாக பயணிப்பவருக்கும், அரசு அனுமதி சீட்டுடன் பிற மண்டலங்களுக்கு செல்வோருக்கும் வாடகைக்கு இயக்கப்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பணியாளர்கள, பணி புரியும் நிறுவனங்களுக்கு குழுவாக சென்று வர தேவையான பஸ் வசதியும் செய்யப்படுகிறது.இதற்கு விரும்பமுள்ள தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் குழுவாக பயணிக்க விருப்புவோர், போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் மண்டலத்தில் பஸ் தேவைப்படுவோர் 94450 21211 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.குழு அமைப்புகடலுார் கோட்ட மேலாளர் (வணிகம்) சுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், கடலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணி புரியும் துணிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களை அணுகி, அரசு பஸ்களை பயன்படுத்துக் கொள்ளுமாறு பேசி வருகின்றனர்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment