Join THAMIZHKADAL WhatsApp Groups
தணிக்கையாளர்களான, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்சி' என்ற, சி.ஏ., தேர்வு, ஆண்டுதோறும், மே மாதமும், நவம்பர் மாதமும் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, மே மாதத் தேர்வு, கொரோனாகாரணமாக, ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு, தேர்வு மையத்தை மாற்றுவதற்கான, ஆன்லைன் வசதி, அறிமுகம் செய்யப்பட்டது.ஆனால், நாடு முழுவதும், ஊரடங்கு விதிகளும், நிபந்தனைகளும், இன்னும் தொடர்வதால், தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தேர்வு மையத்தை விருப்பப்படி குறிப்பிடுவதற்கான, ஆன்லைன் வசதியை திடீரென நிறுத்தி, சி.ஏ., தேர்வு கமிட்டிஅறிவித்துள்ளது. 'அரசின் புதிய விதிகள் வெளியான பின், இந்த வசதி மீண்டும் அறிமுகம்செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.ஏ., தேர்வை, ஜூலையிலும், சி.எஸ்., என்ற, கம்பெனி செயலர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு நடத்த உள்ளதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சி.ஏ., தேர்வு குறித்து, மாறி மாறி அறிவிப்பு வெளியாவதால், ஜூலையில் தேர்வு நடத்தப்படுமா அல்லது வழக்கம் போல எப்போதும் நடைபெறும் நவம்பருக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, தெளிவான அறிவிப்பு வெளியிட, கோரிக்கை எழுந்து உள்ளது.
No comments:
Post a Comment