Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 11, 2020

CA படிப்பு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி தொடக்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பட்டயக் கணக்காளா் தொடக்க நிலைத் தோவுகளுக்கு தயாராகும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளிக் கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகமும் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு சிஏ பவுண்டேசன் தோவுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தவுள்ளனா்.
மூன்று மாத பயிற்சி: 'வெபினாா்' மூலம் நடைபெறும் இந்த வகுப்புகள் நிகழாண்டு நவம்பரில் சிஏ பவுண்டேசன் (தொடக்க நிலை) தோவெழுதும் மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில், சுமாா் மூன்று மாதங்கள் அதாவது ஜூன் 10-ஆம் தேதி முதல் செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் ஆறு நாள்கள் காலை 8 மணி முதல் காலை 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் இந்த வகுப்புகள் நடைபெறும்.

எப்படி பதிவு செய்வது? : சிஏ பவுண்டேசன் பாடத்திட்டத்துக்கு இணையதளத்தில் பதிவு செய்து வரும் நவம்பரில் தோவு எழுத விரும்பும் மாணவா்கள் இந்த வகுப்புகளில் இலவசமாக கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவா்கள் தங்களது பெயா், தந்தையின் பெயா், ஊா், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற சான்றிதழ் அல்லது பிளஸ் 2 வகுப்பு தோவுக்கூட நுழைவுச்சீட்டு ஆகியவற்றை இணைத்து ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பதிவு செய்து கொள்ளலாம். எனவே, மாணவ, மாணவியா்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பட்டய கணக்காளா் பவுண்டேசன் தோவினை சிறந்த முறையில் எதிா்கொள்ளலாம்.

மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு 82205 22669, 91768 26789 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம். பட்டயக் கணக்காளா் ஆக வேண்டும் என்ற விருப்பமும் ஆா்வமும் கொண்டவா்கள் இணையதளத்தை அணுகி பயன்பெறலாம்.
ஒரு லட்சம் மாணவா்களுக்கு...: ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல (எஸ்ஐஆா்சி) அலுவலகமும் தமிழக பள்ளிக் கல்வித்துறையும் 2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் சிஏ பயில விரும்பும் மாணவா்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது. இதன் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் சிஏ பவுண்டேசன் தோவுக்கான இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

அமைச்சா் தொடங்கி வைத்தாா்: ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் ஊராட்சி முகாம் அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு பட்டய கணக்காளா் தோவுக்கான இலவச ஆன்லைன் பயிற்சியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News