Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
புதுச்சேரி : பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளதால் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களின் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும் என புதுச்சேரி மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கம் கோரியுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் 14 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் சேர்க்க போதிய இடங்கள் இல்லை. எனவே பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த புதுச்சேரி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வெற்றி அவர்களின் காலாண்டுத் தேர்வில் 40 சதவீதம், அரையாண்டுத் தேர்வில் 40 சதவீதம், மற்றும் வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீதம் என கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக கல்வி வாரியம் அறிவித்துள்ளது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும், வெற்றி பெற்ற மாணவர்களை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கவும் உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment