Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி இறுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்தாம் வகுப்பு வரை தேர்வுகள் இன்றி மாணவர்களை தேர்ச்சியடைய வைத்துள்ளன. எனினும், சி.பி.எஸ்.இ அடுத்தமாதம் தேர்வுகள் நடக்கும் என அறிவித்திருந்தன. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் தேர்வுகளை ரத்து செய்ய பெற்றோர்கள் சார்பில் வழக்கு தொடர்ப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களை எப்படி தேர்வுக்கு அனுப்ப முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றும் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வை நடத்தும் அமைப்பு ஆகியவற்றுடனும் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யபப்ட்டால், பள்ளி இறுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையும் சேர்க்கை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment