Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 24, 2020

1 - ம் வகுப்பு முதல் , 8 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களூக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு !!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கான அரிசி, பருப்பு போன்றவை பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் , சத்துணவுக்கான உணவு தானியங்களை, மாணவர்களுக்கே வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அதாவது 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, சத்துணவுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குரிய அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில், பள்ளி மாணாக்கர்களுக்கு அரிசி, பருப்புகளை வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment