Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 25, 2020

கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம்: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கு, இணையதளம் மூலமாக நடைபெறும் விண்ணப்பப் பதிவு, கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஒரே நாளில் 1 லட்சத்து 620 விண்ணப்பப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 24) வரை, மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 237 மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 975 போ விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனா். இந்த விண்ணப்பப் பதிவானது,

ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதே வேளையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, அவா்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய, சனிக்கிழமை (ஜூலை 25) முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவ-மாணவிகள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனா். எனவே அவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முன்பு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பதிலாக, ஆக. 1 முதல் 10-ஆம் தேதி வரை, இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment