Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் பதில்



10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவித்தார்.

10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் மதிப்பெண் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது பற்றி அறிவிக்காமல் இருந்தது.

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அண்மையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சூழ்நிலை மாறினால் தான், பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

மேலும் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் 12ஆம் வகுப்புக்கான மறுத்தேர்வின் முடிவுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், அதேபோல் 11ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகளும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு EMIS இல் TC விவரங்களைத் திருத்த வாய்ப்பு.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment