Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை குறைப்புக்கு உதவும் இஞ்சி-பூண்டு தேநீர்!


நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் மசாலா பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக இஞ்சி மற்றும் பூண்டு பல வித நோய்களில் இருந்து விடுபட உங்களுக்கு உதவும்.

இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் தேநீராக குடித்தால் உங்கள் தொண்டைக்கு ஒரு இதமான உணர்வு கிடைக்கும். சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். உங்களுக்கு ஏற்ற வகையில் இந்த உணவுகள் இருந்தால் மட்டும் அதனை தொடர்வது நல்லது.


இஞ்சி- பூண்டு டீ தயாரிக்கும் முறை:

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிய துண்டு இஞ்சியை சேர்க்கவும். அதனை தோல் உரித்து நன்றாக கழுவிய பிறகு நீரில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு நன்றாக நறுக்கிய பூண்டு மற்றும் மிளகு சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். அதனையடுத்து இந்த தேநீரை வடிகட்டி, சுவைக்காக தேன் கலந்து குடிக்கவும்.

மருத்துவ குணங்கள்:

இஞ்சி - பூண்டு தேநீர் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும் இது பயன்படுகிறது. நல்ல செரிமானத்திற்கு இந்த தேநீர் உதவும்.


அஜீரணம், குமட்டல் உள்ளிட்ட தொந்தரவுகளில் இருந்து விடுபட இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது. அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு பண்புகள் பூண்டுக்கு உண்டு. சளி, இருமல், தொண்டை வலி, மாதவிடாய் வலிகளில் இருந்து விடுபட இஞ்சி - பூண்டு தேநீரை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment