Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 8, 2020

நல்லாசிரியர்கள் விருது: விண்ணப்பிக்க அவகாசம்


தேசிய நல்லாசிரியர்' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, கல்வித்துறை வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தகுதியுள்ள ஆசிரியர்கள், https://mhrd.gov.in/ மற்றும் https://nationalawardtoteachers.mhrd.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 6ம் தேதிக்குள், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். தற்போது இதற்கான காலக்கெடுவை, ஜூலை 11 வரை நீட்டித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது; 2019ம் ஆண்டில் குறைந்தது, 4 மாதங்கள், அதேநேரம், ஏப்., 30ம் தேதி வரை பணியாற்றி இருக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment