Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 1, 2020

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது மதிப்பெண்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா வைரஸ் பாதிப்பால் திட்டமிட்ட படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News