Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்து அறிவிக்கப்பட்டது. மேலும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுபட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பனிரெண்டாம் வகுப்பில் சில தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்தாலோசித்த பின்னர், தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்த தகவல் தெரிவிக்கப்படும். கொரோனா தொடர்பான நிலைமைகள் சீரான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலங்கள் ஆகலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment