Friday, July 31, 2020

12 ம் வகுப்பு மறு வாய்ப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் செங்கோட்டையன்!




12 ம் வகுப்பில் மறுவாய்ப்புத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11 ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

கொரோனா வைரஸ் காரணமாக 12 ம் வகுப்பு இறுதி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மறுவாய்ப்பு தேர்வில் குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், 12 ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment