Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

கொரோனா பாதித்த அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை


ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, 14 நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

ஆந்திராவில், இன்று மட்டும் 6,045 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64,713ஆக அதிகரித்தது.

இன்று 65 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி 823 ஆக உயர்ந்தது.இந்நிலையில், அங்கு பல அரசு ஊழியர்களுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. எனவே, 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது.

மற்றவர்கள், தங்கள் வீடுகளிலிருந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களுக்கு, 14 நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து, ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment