Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 3, 2020

ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்- AICTE உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான மாணவர்கள் சேர்ந்து வரும் நிலையில், கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்து வருகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியிருக்கும். ஆனால் தற்போது கொரோனா பிரச்சனையால் மாணவர்கள் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் புதிய கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கட்டண நிர்ணய குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News