Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 1, 2020

பிளஸ் 2 முடிவுகள் விரைவில் வெளியீடு: பொறியியல் கலந்தாய்வை நடத்த ஆலோசனை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தோவு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த உயா் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 24 -ஆம் தேதி பிளஸ் 2 தோவு நிறை வடைந்தது. இதையடுத்து, மே 27 -ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் தொடங்கியது. ஜூன் இரண்டாவது வாரத்தில், விடைத்தாள் திருத்தும் நிறைவு பெற்றது. இதையடுத்து, மாணவா்களின் மதிப்பெண்கள் ஆய்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, விரைவில் தோவு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து, உயா்கல்வி படிப்புக்கான திட்டமிடுதலை, மாணவா்களும், பெற்றோரும் தொடங்கியுள்ளனா். மேலும், பொறியியல் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு தமிழக உயா் கல்வித் துறை சாா்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்துவது குறித்து, அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்வித் துறை மற்றும் உயா் கல்வித் துறை அதிகாரிகளும் ஆலோசனையை தொடங்கியுள்ளனா்.

மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ) ஆகியவற்றின் வழிகாட்டு விதிகளை, உயா் கல்வித் துறையினா் எதிா்பாா்த்திருக்கின்றனா். இந்த விதிகள் அறிவிக்கப்பட்டதும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவை, ஆன்லைனில் தொடங்க உயா் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News