Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 18, 2020

ஐஐடி மாணவர் சேர்க்கையில் +2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது


நாட்டில் உள்ள மிக முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடியில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக ஐஐடி கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜேஇஇ (மேம்பட்ட) தேர்வே முக்கியத் தகுதியாக எடுத்துக் கொள்ளப்பம். அதே சமயம், பனிரெண்டாம் வகுப்பில் எடுத்த 75%மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால், இந்த வழிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ (மேம்பட்ட) தேர்வு மட்டுமே தகுதியாக எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு பதிலாக பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளுமாறு மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment