Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 31, 2020

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!


தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. முந்தைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு.

முதல்வர் அறிக்கை :

குழுவுடன் பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் , குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் , மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் , மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும் , கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் , தளர்வுகளுடனும் , 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது . மேலும் , ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ( 2.8.2020 , 9.8.2020 , 16.8.2020 , 23.8.2020 & 30.8.2020 ) எவ்வித தளர்வுகளும் இன்றி , தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் .

I ) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ( Except Containment zones ) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது :

1 ) தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள் , தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி காலை நிறுவனங்கள் , 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் .

2 ) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் , 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது . எனினும் , உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் , அவை இயக்கப்படக் கூடாது . உணவகங்களில் முன்பு இருந்தது ( 31.7.2020 வரை ) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் .

3 ) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை ( Standard Operating Procedure ) பின்பற்றி , ஊராட்சி , பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள் , அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும் , சிறிய மசூதிகளிலும் , தர்காக்களிலும் , தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் . பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது .

4 ) காய்கறி கடைகள் , மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , மாலை 6 தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

5 ) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் , தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

6 ) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் , மின் வணிக நிறுவனங்கள் ( E - Commerce ) மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

II ) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ( Except Containment zones ) , ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது :

1 ) அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் ( Standing Operating Procedure ) பின்பற்றி , ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள் , அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உண்ண திருக்கோவில்களிலும் , சிறிய மசூதிகளிலும் , தர்காக்களிலும் , தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் . பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

No comments:

Post a Comment