THAMIZHKADAL Android Mobile Application

Friday, July 10, 2020

டைபாய்டு வராமல் இருக்கணுமா? அப்ப வீட்டுல இந்த 3 செடியை வளருங்க...

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மிக கடுமையான நோய்களில் டைபாய்டும் ஒன்று. இது சால்மோனெல்லா என்டெரிகா செரோடைப் டைபி பாக்டீரியாவால் ஏற்படுகிறது. டைபாய்டுக்கான முக்கிய காரணங்கள் என்றால், அசுத்தமான நீர் அல்லது உணவு மட்டும் தான்.

இதுபோன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வெளியேற்றும் மலம் வழியாக சுற்றியுள்ள நீர்வளங்கள் மாசுபடக்கூடும். ஏனெனில் அவற்றில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் உள்ளன. சரியான நேரத்தில் இந்த நோயை கண்டறிதல் மிகவும் முக்கியமானது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

டைபாய்டு நோய்க்கான பொதுவான அறிகுறிகள்:

* கடுமையான தலைவலி

* அதிக காய்ச்சல்

* உடல் வலி

* குறைந்த அளவிலான பசி

* குமட்டல் மற்றும் வாந்தி

* வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல்

* வயிற்றில் வலி

இது மாதிரியான அறிகுறிகளை உடனே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம், அந்த அறிகுறிகளை 3 முதல் 5 நாட்களுக்குள் குணப்படுத்த முடியும். தவறும் பட்சத்தில் அவை சில வாரங்களுக்கு மோசமடையக்கூடும். சில சமயங்களில், அறிகுறிகள் தொடர்ந்து அதிகரிக்குமாயின் ஆபத்தும் சற்று அதிகம் என்றே கூற வேண்டும். டைபாய்டால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலியை அனுபவிக்கின்றனர். இந்த நோய் ஏற்பட்டு 3 முதல் 4 வாரங்களில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டால், சிக்கல்கள் ஏதும் இல்லாமல் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

டைபாய்டு / மழைக்கால நோய்களுக்கான மருத்துவ தாவரங்கள்:

எப்போதும் மருந்துகளை மட்டுமே நம்பியில்லாமல், சில மருத்துவ தாவரங்களை வீட்டில் வைத்திருப்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்கள் அதிகமாக பரவி வரும் காலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்தும் பல்வேறு தாவரங்கள் உள்ளன. அவை ஆயுர்வேதத்தின்படி மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மேலும் அவை இயற்கையான முறையில் உடல் சுத்தப்படுத்திகளாகவும் செயல்படுகின்றன. நோய்களைத் தடுக்க மழைக்காலத்தில் ஒருவர், தனது வீட்டில் வைத்திருக்கக்கூடிய சிறந்த மருத்துவ தாவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

துளசி செடி

துளசி இலைகள் இயற்கையாகவே தன்னுள் மருந்துவ குணங்களை கொண்டுள்ளது. மேலும், அதனை பாலுடன் சேர்ப்பதன் மூலம், அதன் மருத்துவ பண்புகள் மேலும் மேம்படுத்தப்படுகின்றன. துளசி இலைகளை பாலில் சேர்த்து கொதிக்க வைக்கும் போது, துளசியின் அனைத்து குணங்களும் பாலில் கலக்கப்படுகின்றன. சாதாரணமாகவே பாலில் முழுமையான ஊட்டச்சத்து உள்ளன. இப்போது இரண்டும் சேர்ந்தால் உடலின் பல குறைபாடுகள் நீங்குவதோடு, நோய்களிலிருந்தும் விடுவிக்கின்றன.

சாதாரண துளசி செடியில் பல நோய்களுக்கான மருந்து உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதனை அறியாமல், உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்து மாத்திரை வாங்கி சாப்பிட தொடங்கிவிடுகின்றனர். ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு கடுமையான நோய் இருந்தால் மட்டும், தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். ஆனால் வீட்டு மருந்துகளையும் தொடருங்கள். துளசி இலைகள் பல பண்புகளின் களஞ்சியமாகும். மேலும், பாலில் கொதிக்க வைக்கும் போது, அது ஒரு மருந்தாக செயல்படுகிறது. ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், துளசி இலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. பாலில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. துளசி பாலுடன் சேரும் போது, இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. மேலும், சளி, இருமல் ஆகியவற்றை தடுக்கவும் உதவுகிறது.


மாதுளை செடி

மாதுளை விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். மாதுளையானது, வைட்டமின் சி-யின் ஒரு சிறந்த ஆதாரம். மாதுளை சாறு குடிப்பதன் மூலம் செரிமானம் மேம்படும். மேலும், மாதுளையிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகப்பரு பிரச்சனையை வராமல் தடுப்பதோடு, அனைத்து விதமான பருவகால நோய்களையும் விலக்கி வைத்திடும். ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும் போது, வழக்கத்தை விட அதிகமாக தாகம் ஏற்படுவது இயல்பு. இதுபோன்ற தருணங்களில், மாதுளைச்சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற்று, உடல்நலக் குறைவில் இருந்து விரைவாக மீள முடியும்.

எலுமிச்சை செடி

லெமன்கிராஸ் அதாவது எலுமிச்சை செடியானது, பாக்டீரியா, பூஞ்சை அல்லது ஈஸ்ட் தொற்றுநோய்களை விலக்கி வைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் கிருமி நாசினிகளான, ஆன்டிசெப்டிக் பண்புகள் நிறைந்துள்ளது. இது இரத்தத்தை சுத்திகரித்து, நச்சுத்தன்மையை அகற்றிட உதவுகிறது. எலுமிச்சைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையையும் குறைத்திட முடியும். ஏனென்றால், அதிலுள்ள சிட்ரால், வயிற்று பகுதியில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

எலுமிச்சை டீ குடிப்பது உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வலியை போக்கிடும். குறிப்பாக, தலைவலி மற்றும் மூட்டு வலிக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வயிற்று வலி, வாயு தொல்லை, மலச்சிக்கல், அஜீரணம், குமட்டல் அல்லது வாந்தி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, வயிற்றுப் பிடிப்பிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கும் உதவக்கூடியது.

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News