Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 10, 2020

கவலை மற்றும் மனச்சோர்வு இருக்கிறதா? அப்ப இதை சாப்பிடுங்க...

ஒரு மனிதனை வாட்டி வதைப்பதில் உடல் நோயை விட மனநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது . அந்த வகையில் கவலை மற்றும் மனச்சோர்வு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக மூளையில் ஏற்படும் ஒரு வேதியியல் ஏற்றத்தாழ்வு காரணமாகத்தான் மனச்சோர்வு என்பது ஏற்படுகிறது.

நரம்பு மண்டலத்தில் காணப்படும் கெமிக்கல்கள் மூலமாகத்தான் நம் நரம்புகளின் நியூரான்கள் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று தொடர்பு கொள்கின்றன. எனவே மனச்சோர்வு இவையெல்லாம் இல்லாமல் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகிறது. ஆரோக்கியமான உணவுகள் போதும் நம் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் சில சமயங்களில் சின்னதாக ஒரு சாக்லேட் சாப்பிடுவது உங்க மனதை குஷிப்படுத்தலாம், சிலருக்கு சமோசா சிலருக்கு பாக்கெட் சிப்ஸ் இருந்தா போதும் சந்தோஷம் ஆகி விடுவார்கள்.

எனவே நமக்கு ஏற்படும் கவலை மற்றும் மனச்சோர்வை போக்குவதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மனச்சோர்வு ஏற்படும் சமயங்களில் எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுகளால் நமக்கு என்ன பயன் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

குங்குமப் பூ

குங்குமப் பூ கவலையை கட்டுப்படுத்தும் ஒரு அதிசய பூ என்று கூறலாம். பண்டைய காலத்தில் இருந்து நிறைய மருத்துவ ரீதியாக பயன்பட்டு வருகிறது. இந்த குங்குமப் பூ மன அழுத்த ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. நீங்கள் பதட்டம் மற்றும் குறைந்த மன நிலையில் இருந்தால் 2-3 குங்குமப் பூ இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து குடித்து வாருங்கள். குங்குமப் பூவை போட்டு சூடான தேநீர் தயாரித்து கூட நீங்கள் குடித்து வரலாம். அதனுடன் சில பாதாம் பருப்பை கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். டிரிப்டோபன் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இது மகிழ்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது.

தக்காளி

தக்காளியில் லைக்கோபைன் என்ற பொருள் உள்ளது. இது தான் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. எனவே தினமும் தக்காளியை சாப்பிட்டு வந்தால் ஒரே வாரத்தில் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பாதியளவு குறைந்து விடுமாம்.


கீரைகள்

உங்க உணவில் போலேட் குறைவாக இருந்தாலும் மன அழுத்தம் தூண்டப்படும். எனவே போலேட் சத்து பற்றாக்குறையை போக்க கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி என கோதுமை புல், மோரிங்கா, நெல்லிக்காய் பொடி போன்றவற்றை தண்ணீரில், ஸ்மூத்தி அல்லது லெஸ்ஸி அல்லது தயிரில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். குறிப்பாக பச்சை இலை உணவுகளில் போலேட் அதிகமாக காணப்படுகிறது. அவை மன ஆரோக்கியத்தையும், மன நிலையையும் மேம்படுத்தும்.

மகிழ்ச்சியான உணவுகள்

நாம் மனச்சோர்வாக இருக்கும் போது ஏன் கார்போஹைட்ரேட் உணவை விரும்புகிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா? கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகள் டிரிப்டோபன் (மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைக் கொண்டு செல்லும் ஒரு அமினோ அமிலம்) என்ற அமினோ அமிலம் சுரக்க உதவி செய்கிறது. இதன் உதவியால் தான் மூளையில் செரோடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கிறது. டிரிப்டோபன் உதவியின்றி மகிழ்ச்சி ஹார்மோன் மூளைக்கு வர முடியாது.

எனவே மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்க பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், தர்பூசணி விதைகள் போன்ற விதைகளை உட்கொள்வதும் உங்களுக்கு சிறந்த தீர்வளிக்கும்.


ஆன்டி ஆக்ஸிடன்டுகள்

கிரீன் டீ, ஆப்பிள், திராட்சை, கிராம்பு, ஆர்கனோ, இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக செயல்படுகின்றன. உங்கள் மனச்சோர்வு நீங்க டிரிப்டோபான் நிறைந்த வாழைப்பழங்கள், அக்ரூட் பருப்புகள், பாதாம் பருப்புகளை போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

வறுத்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்

உங்களுக்கு மனச்சோர்வு அடிக்கடி ஏற்படுவதற்கு வறுத்த உணவுகளும் காரணமாக இருக்கலாம். எனவே வறத்த இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். அசைவ உணவுகளில் அராச்சிடோனிக் அமிலம் என்ற ஒரு வகை கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இது நமது மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கொழுப்பு நம் நரம்புகளுக்கு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதே மாதிரி அஸ்பார்டம் அல்லது செயற்கை இனிப்புகள், குளிர் பானங்கள், செயற்கை பானங்கள், உற்சாக பானங்கள், தானியங்கள், சூயிங்கம், சாக்லேட்கள், இனிப்பு வகைகள் போன்ற செயற்கை இனிப்புகளை தவிருங்கள். இந்த வகையான உணவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. மனச்சோர்வைத் தான் கொடுக்கும். எனவே எப்பொழுதும் ஆரோக்கியமான, நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.


உடற்பயிற்சி செய்யுங்கள்

யோகா, பிராணயாமம் மற்றும் சிரிக்கும் யோகா பயிற்சிகள், மனதை ரிலாக்ஸ் செய்யும் யோகா பயிற்சிகள் ஆகியவற்றை செய்து வாருங்கள். உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை பெற வெயிலில் செல்லுங்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்டு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தால் நீங்களும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.

No comments:

Post a Comment