Thamizhkadal WhatsApp Channel

'5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்'.. 'உங்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்புகள்'.. 'உடனே அப்ளை பண்ணுங்க'


இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருவாடானை வட்டம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம்: வட்டாச்சியர் அலுவலகம்

மேலாண்மை: தமிழக அரசு

பணி : கிராம உதவியாளர் ( village assistant)

பணி இடங்கள்: இராமநாதபுரம், திருவாடானை

மொத்த காலிப்பணியிடங்கள் : 31

கல்வி தகுதி :

5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை

வயது வரம்பு:

21 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Share:

3 comments:

Total Pageviews

Categories