Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 29, 2020

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்: பஞ்சாப் அரசு அறிவிப்பு


பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்ளு ஸ்மார்ட்போன்கள் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கமுடியாத சூழ்நிலையில், பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புக்காக முதற்கட்டமாக 50,000 மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏழை மாணவர்களும் ஆன்லைன் கற்றலை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொற்றுநோயின் முழு நிலைமையையும் ஆராய்ந்த பின்னரே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தனியார் வெளியீட்டாளர்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கும்படி, தனியார் பள்ளிகள் மாணவர்களை நிர்பந்திக்கக்கூடாது என்றும் அரசின் அதிகாரப்பூர்வ புத்தகங்களைப் பயன்படுத்தவே அனைத்து பள்ளிகளும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment