Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 29, 2020

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை - செங்கோட்டையன்.!



நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை எனவும் தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment