
சென்னை : 'வங்கிகளில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு, வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், வங்கி அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்று வதில்லை. வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், அவர்கள் கேட்பதில்லை.மேலும், வங்கியில் குறைந்தளவு ஊழியர்களே பணிக்கு வருகின்றனர்;பாதுகாவலர்களும் பெரும்பாலான வங்கிகளில் கிடையாது. இதனால், வங்கி பணிகளை மேற்கொள்ளவே, நேரம் கிடைப்பதில்லை.எனவே, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தாங்களாகவே தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment