சிதம்பரம் : இந்தியாவில் வேலை வாய்ப்புகளில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த ஆன்லைன் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. கொரொனா தொற்று ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன் பெற, அண்ணாமலைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனரகம் சார்பில் இலவச ஆன்லைன் வெபிநார் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது இந்தியாவில் வேலைவாய்ப்புகளில் வளர்ந்து வரும் போக்குகள்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியை பதிவாளர் கிருஷ்ணமோகன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிவில் மற்றும் கட்டமைப்பு துறை பேராசிரியர் பாஸ்கர், வியாபார நிர்வாகம் பிரிவு பேராசிரியர் பிரகதீஸ்வரன், அரசியல் அறிவியல் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் வேலை வாய்ப்புகள் பெறுவது குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.வேளாண் புல வேலைவாய்ப்பு அதிகாரி சீனிவாசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 240க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கு பெற்றனர். அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment