Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 17, 2020

மணித்தக்காளி கீரையில் உள்ள நன்மைகள் என்னென்ன?..!!


ஒவ்வொரு வகையான கீரைகளும், காய்கறிகளும், பழங்களும் நமது உடலுக்கு பல விதமான நன்மையை அளிக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்களை அறிந்துகொள்வது மிகுந்த நன்மையை அளிக்கும் விசயமாகும். மணித்தக்காளி கீரையில் உள்ள நன்மைகள் குறித்து இனி காண்போம்.

கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும்.


மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்.

No comments:

Post a Comment