Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 10, 2020

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...

அமைதியாக மனிதரைக் கொல்லக்கூடியது தான் உயர் இரத்த அழுத்தம். மற்ற நோய்களைப் போல் இல்லாமல், இந்த நிலையின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை. மேலும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது ஒருவருக்கு இருக்கலாம். உயர் இரத்த அழுத்தம் தான் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாகும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், அன்றாடம் தவறாமல் மாத்திரைகளை எடுத்து வர வேண்டியது அவசியம். மேலும் மருந்துகளைத் தவிர, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். நாம் தற்போது கோடைக்காலத்தின் மத்தியில் இருக்கிறோம். இந்த பருவத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பல்வேறு பழங்கள் கிடைக்கும். உங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், கோடைக்கால பழங்களை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இக்கட்டுரையில் உயர் இரத்த அழுத்தத்தை நிலையான அளவில் பராமரிக்க உதவும் சில கோடைக்கால பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, வாங்கி உண்டு மகிழுங்கள்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு மட்டுமின்றி, வைட்டமின் சி மற்றும் லைகோபைன் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுபவைகளாகும். ஆகவே இந்த கோடைக்கால பழத்தை உங்கள் டயட்டில் சேர்த்து, அதன் முழு நன்மைகளையும் பெறுங்கள்.

மாம்பழம்

பழங்களின் அரசனான மாம்பழம் ஒரு கோடைக்கால பழம். இந்த பழத்தில் நார்ச்சத்து மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த இரண்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். ஆகவே இனிமேல் அச்சம் கொள்ளாமல், மாம்பழத்தை கோடையில் ருசியுங்கள்.


கிவி

கிவி பழமும் கோடையில் கிடைக்கக்கூடிய பழம். இந்த பழத்தில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்க்க உதவும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்றவையும் உள்ளன. ஆய்வின் படி, ஒரு நாளைக்கு 3 கிவி பழத்தை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும். எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஸ்ட்ராபெர்ரி எலியின் இரத்த அழுத்தத்தைக் குறைத்திருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் இன்னும் மனிதர்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

வாழைப்பழம்

வாழைப்பழம் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மிகவும் நல்லது. இதில் சோடியம் மிகவும் குறைவு. அதிகப்படியான சோடியம் தான் இரத்த நாளங்களில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. ஆய்வு ஒன்றில், எலிக்கு 50 கிராம் நன்கு கனிந்த வாழைப்பழக்கூழ் கொடுக்கப்பட்டு வந்தது. அதில் அந்த எலிக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

No comments:

Post a Comment