Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 16, 2020

தனியார், 'டிவி, யு டியூப்'களில் வீடியோ பாடம்


சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி, 'டிவி' மட்டுமின்றி, தனியார், 'டிவி'க்கள்; 'யு டியூப்' சேனல்களிலும் பாடங்களை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கும், இந்த வாய்ப்பு கிடைக்கும் வகையில், தமிழக அரசின் கல்வி, 'டிவி'யில் வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஒளிபரப்பை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.ஒவ்வொரு நாளும் காலை, 6:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை அரை மணி நேரம் மற்றும் ஒரு மணி நேர பாட வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 

இதற்கான நிகழ்ச்சி அட்டவணை, https://www.kalvitholaikaatchi.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.வரும் நாட்களில் தனியார், 'டிவி'க்கள், யு டியூப் சேனல்கள் ஆகியவற்றிலும், வீடியோ பாடங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக கல்வி துறையினரிடம், தனியார் நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பள்ளிக்கல்வி துறை அமைச்சர்செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில், 'டிவி' வாயிலாக, பள்ளி மாணவர்களுக்கு, கல்வியை எடுத்துச் செல்லும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்து உள்ளார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தேர்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் தான், 'டிவி' சேனல்களில் பாடம் கற்பிக்க உள்ளனர்.எந்த வகை மாணவர்களும், 'டிவி'யில் கல்வியை கற்கலாம். அப்போது, பெற்றோரும் கண்காணிக்க முடியும்.

ஒவ்வொரு வகுப்புக்கும், குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, பாடங்களை கற்பிக்க வசதியாக, கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் நிலை இல்லை. பிளஸ் 2 மாணவர்கள் அனைவரின் கையிலும், 'லேப்டாப்' உள்ளது. அவர்களின் லேப்டாப்களில், பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் மட்டுமே, 'க்யூஆர் கோடு' வாயிலாக, பாடம் கற்கும் முறையை அமல்படுத்தி உள்ளோம். பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment