Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 8, 2020

கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!..

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மஞ்சள் மிகவும் பிரபலமான மசாலாப் பொருளாகும். இதற்கு அதில் உள்ள மருத்துவ பண்புகளை முதன்மையான காரணமாக கூறலாம். உதாரணமாக, இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. அதோடு பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட வல்லது. இத்தகைய மஞ்சளை அன்றாட சமையல் அனைத்திலும் தவறாமல் சேர்த்துக் கொள்வதுடன், அந்த மஞ்சளை நீரில் சேர்த்து கலந்து குடித்தால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம். இக்கட்டுரையில் மஞ்சள் நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்றும், மஞ்சள் நீரை எவ்வாறு தயாரிப்பது என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நீர் தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த பானத்தை வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே குடித்து விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இப்போது மஞ்சள் நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

டைப்-2 சர்க்கரை நோயை தடுக்கும்

பல்கலைகழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால் டைப்-2 சர்க்கரை நோயில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்தது. எனவே டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பானம் மிகவும் சிறப்பான பானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

வீக்கத்தை எதிர்த்துப் போராடும்

நாள்பட்ட வீக்கம்/அழற்சியானது பல நோய்களால் ஏற்படலாம். இருப்பினும், மஞ்சள் கலந்த நீரை ஒருவர் ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.

இதய ஆரோக்கியம்

மஞ்சளில் உள்ள குர்குமின் பண்புகள், இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக் படிகங்களைத் தடுக்கும் மற்றும் இரத்தம் உறைவதில் இருந்து விடுவித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை நீக்கும்

2012 இல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவைப் பார்த்தால், மஞ்சளில் சில வலுவான செயல்பாட்டைக் கொண்ட டிக்ளோஃபெனாக் இருப்பது நிரூபிக்கப்பட்டது. இது மூட்டு வலி மற்றும் வீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருளாகும். எனவே தான் மஞ்சள் நீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை நீங்கும் என்று கூறப்படுகிறது.

மூளை ஆரோக்கியம்

ஒரு ஆராய்ச்சியின் படி, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறுகளுக்கும், மூளையில் உள்ள நியூரோட்ரோபிக் காரணி எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வளர்ச்சி ஹார்மோனின் குறைவிற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது.

கல்லீரல் பாதுகாப்பு

மஞ்சள் நீர் நிச்சயமாக கல்லீரலை நச்சு சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. மேலும் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

செரிமானம் மேம்படும்

தினமும் மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பித்தநீரின் வெளியீட்டையுத் தூண்டும். எனவே நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், மஞ்சள் நீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்.

வாழ்நாள் நீடிக்கும் மற்றும் முதுமை தடுக்கப்படும்

வயதானதற்கான முக்கியமான காரணிகளில் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் காயங்கள் உள்ளன. ஆனால் மஞ்சளில் உள்ள குர்குமின், இவற்றின் செயல்பாட்டை வெற்றிகரமாக தடுக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News