Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 19, 2020

பலவகை நோய்களை விரட்டும் பப்பாளி பழம்!


பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக் கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு பேரிக்காய் வடிவமும் சதைப்பகுதியையும் கொண்டுள்ளது. இந்த பழத்தில் நிறைய கருப்பு வட்ட வடிவமான ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்கக் கூடியது. பப்பாளி பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுவதால் மலச்சிக்கல் நீங்குகிறது.

பப்பாளியில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஏராளமான கனிமங்கள் உள்ளன. பப்பாளியில் சோடியம் குறைந்த அளவே காணப்படுகிறது. நம் தோலை பாதுகாப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. இன்னும் என்னென்ன ஏராளமான நன்மைகளை பப்பாளி பழம் வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

​கொழுப்பைக் குறைக்கிறது

பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாகுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு போன்றவை ஏற்படும். பப்பாளி சாறுகள் நீரிழிவு எலிகளில் லிப்பிட் மற்றும் ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது. எனவே இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.

​உடல் எடையை குறைக்க பயன்படுகிறது

ஒரு நடுத்தர வடிவ பப்பாளி பழத்தில் 120 கலோரிகள் காணப்படுகின்றன. நீங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் இந்த லேசான பழத்தை உணவில் சேர்க்க மறக்காதீர்கள். இது முழு அளவிலான உணர்வை ஊக்குவிப்பதன் மூலமும், பசியை கட்டுப்படுத்துவதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும் கணிசமான அளவு நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளது.

​நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கிறது

இந்த நோயெதிரிப்பு அமைப்பு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகிறது. ஒரு பப்பாளி பழத்தில் உள்ள விட்டமின் சி 200% தேவையை பூர்த்தி செய்கிறது. இது ஒரு வலுவான நோயெதிரிப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

​நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

பப்பாளியில் சர்க்கரை சத்து குறைவாகவே காணப்படுகிறது. ஒரு கப் பப்பாளியில் 8.3 கிராம் அளவிற்கு சர்க்கரை சத்து உள்ளது. இது கிளைசெமிக் குறியீடும் கொண்டுள்ளது. இதிலுள்ள விட்டமின்கள், பைட்டோநியூட்ரியன்கள் போன்றவை இதய நோய்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

​கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ மற்றும் ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை சேதமடையாமல் தடுக்கின்றன. விட்டமின் ஏ மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கிறது. தக்காளி மற்றும் கேரட்டில் காணப்படும் விட்டமின் ஏயை விட அவற்றில் உள்ள கரோட்டினாய்டுகள் அதிக உயிர் பெறுகின்றன.

​கீல்வாதத்தில் இருந்து பாதுகாக்கிறது

கீல்வாதம் நம்மை பலவீனப்படுத்தும் நோயாகும். பப்பாளி நம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் விட்டமின் சி உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய காணப்படுகின்றன. அன்னல்ஸ் ஆஃப் ருமேடிக் நோய்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வைட்டமின் சி குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ளும் நபர்களுக்கு மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது.

​செரிமானத்தை மேம்படுத்துகிறது

செரிமானத்திற்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் அதிக அளவு எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட் அல்லது ரெஸ்டாரன்ட் உணவை சாப்பிடுவது அதிகமாகி வருகிறது. ஒரு பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதவிடாய் வலியை போக்கும்

மாதவிடாய் வலியை அனுபவிக்கும் பெண்களுக்கு பப்பாளி உதவுகிறது. ஏனெனில் பாப்பேன் எனப்படும் நொதி மாதவிடாய் காலத்தில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் எளிதாக்கவும் உதவுகிறது.

​சருமம் வயதாகுவதை தடுக்கிறது

எல்லாருமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். தினமும் பப்பாளி சாப்பிடுவது உங்க ஆரோக்கியமான செயல்முறையை மேம்படுத்தும். பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இது உங்க சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது. எனவே நீங்கள் இளமையாக இருக்க உங்க சருமத்தை மிளிர வைக்க பப்பாளியை பயன்படுத்தி வாருங்கள்.

​கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதைத் தவிர கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் ஏ சருமத்தின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இது கூந்தலை மென்மையாக்கவும், பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. பப்பாளி சாற்றை உச்சந்தலையில் பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையை போக்க பயன்படுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலுக்கு பயன்படுகிறது. முடி வளர்ச்சியையும் பலத்தையும் அதிகரிக்கும்.இருப்பினும் இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. முடிகள் மெலிந்து போவதை தடுக்கிறது.

​புற்றுநோயை தடுக்கிறது

பப்பாளியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் பைட்டோநியூட்ரியன்கள், ப்ளோனாய்டுகள் உள்ளன. இது உங்க உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் துறையால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க பப்பாளியில் பீட்டா கரோட்டின் அதிகளவு காணப்படுகிறது

​மன அழுத்தத்தை போக்க உதவுகிறது

இதில் விட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதால் மன அழுத்தத்தில் இருந்து விரட்ட பயன்படுகிறது. 200 மில்லி கிராம் வைட்டமின் சி எலிகளில் மன அழுத்த ஹார்மோன்களின் ஓட்டத்தை சீராக்க உதவும் என்று கண்டறியப்பட்டது.

எனவே இவ்வளவு நன்மைகள் தரும் பப்பாளி பழத்தை உங்க உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment