Search This Blog

Wednesday, July 29, 2020

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் !!

0 comments

அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்த பட்டியலை அறிவித்து உள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த பட்டியில் உள்ள கல்லூரிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றும் இந்த பட்டியலில் இல்லாத கல்லூரிகளை தேர்வு செய்து மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை பாழாக்கி கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது.

https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக் கழக அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இருப்பதாகவும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 5 மண்டலங்களில் உள்ள இந்த கல்லூரியின் பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் புதிதாக பொறியல் கல்லூரி தொடங்கும் தொடங்குபவர்கள் வரும் 15 ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment