Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 8, 2020

கொடுமையான சிறுநீர் கடுப்பு, மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவஸ்த்தை படுகிறீர்களா.? உடனடியாக இதனை செய்யுங்கள்..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெளியே சென்று வீட்டுக்கு வந்தால் நீ யார் என வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு எம்மை வெயிலின் தாக்கம் பாதிக்கின்றது. வெயில் காலம் ஆரம்பித்தால் பல விதமான நோய்களும் ஆரம்பித்துவிடும்.

குறிப்பாக மலச்சிக்கல், சிறு நீர் கடுப்பு, தொண்டை வலி போன்றவை அவஸ்த்தை கொடுக்கும். இன்று நாம் பார்க்கப் போவது சிறு நீர் கடுப்பு தீர என்ன செய்ய வேண்டும் என்று தான். சாதாரணமாக வெளியே சென்றாலும் வீட்டில் இருந்தாலும் சிறு நீர் கடுப்பு வந்துவிடும். ஆனால் பெரும்பாலும் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு அல்லது வெயிலில் நின்றாலே சிறு நீர் கடுப்பு வரும்.

வெயில் காலத்தில் ரோட் வேலை செய்வோர்,கட்டட வேலை செய்வோர்களை நினைத்தாலே கண்ணீர் வரும் நிச்சயமாக இவர்களின் பல இரவு உறக்கத்தை இந்த சிறு நீர் கடுப்பு கெடுத்திருக்கும். எமக்காக கஷ்டப் படும் அவர்களுக்கானது இந்த இலகுவான டிப்ஸ்..பெரிதாக எதுவும் இல்லை. 2கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள்.அதில் சின்ன வெங்காயம் 5 தொடக்கம் 10 உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள்.அதனுடன் 2கரண்டி வெந்தையமும் சேருங்கள்.! இரண்டு கப் நீர் ஒரு கப் ஆகும் வரை வைத்துவிட்டு பி இறக்கி வைத்துவிடுங்கள் நன்றாக ஆறியதும் இந்த தண்ணீரை குடியுங்கள். ஒரு முறை குடித்தாலே போதும் உடனே நின்று விடும்.


அதே போல் வெயிலில் வேலைக்கு போது சின்ன வெங்காயம் இரண்டை சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லுங்கள். இதனால் சிறு நீர் கடுப்பு வராது. அத்துடன் நன்றாக தண்ணீர் குடியுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News